சரிதானே

நீ (மாடு) புள்ள மேய குறியா இருக்க,

நான் (கொக்கு) உன்மேல இருக்கற பூச்சிய பிடிக்க பாக்கறேன்,

இதை கண்ட நானோ கவிதையில் சொல்ல நினைக்கிறேன்,

கவிதைய படிச்ச நீயோ என்னை கொல்ல நினைக்கிற…???

காதல் விளக்கம் (Explanation of Love)

காதல்

கா என்ற உயிர்மெய்யும் (அதாவது உயிரோடு உடல் சேர்ந்து)

த என்ற உயிர்மெய்யும் (அதாவது உயிரோடு உயிர் சேர்ந்து)

சேர்ந்து

ல் என்ற மெய்யாய் (உண்மையாய்)வாழ்வதுதான் காதல்…!!

காதல் கவிதை (Love Poem)

காதலிக்க தெரிந்துகொண்டேன் காரணமின்றி,
உந்தன் பார்வையில் காதலை கண்டு கொண்டேன் புரிதலின்றி,
காதலை சொல்ல உந்தன் முன் நிற்கிறேன் பேச்சின்றி,
ஆதலால் காகிதத்தில் கவிதையாய் தொடுக்கிறேன் என் காதலை, ஏற்பாயா….??????

Pepper (மிளகு)

தங்கத்திற்கு ஈடான என் மண்ணின் மிளகே
பத்து இருந்தால் போதும்
பகைவன் வீட்டிலும் உணவருந்தலாமே
பனியில் சனியாய் சளி
அதை விரட்ட வழி
கண்டேனே புதுநெறி
தேனோடு கலந்த போடி மிளகு
சளியை அகற்றுமே…
பாலோடு கலந்த மிளகு தூளோ
கப நோயை தடுக்குமே
கொஞ்சம் மிளகோடு ஓமம் உப்பு சேர்த்து மென்று
உண்டால் தொண்டை வலி நீங்குமே
காலை மாலை மிளகோடு வெல்லம் சேர்த்து
உண்டால் தலைவலி போகுமே
இரத்தச்சோகை
பசியின்மை
நீங்க
அவசியம் தேவை ..
இயற்கையான மிளகு……,