பச்சரிசி சாதமும் பழைய மீன் குழம்பும்

வயல் காட்டிலே

வியர்வை சிந்தையிலே

வெளுத்து வாங்கும் பசியிலே

சட்டென்று திறக்கும் போணியிலே

பல்ல இளிக்கும் பச்சரிசியும்

மண மணக்கும் மீன் குழம்பும்..

அட அட டே…..

Advertisements

பவளமல்லி

பவளமான உடலோடு

வெண்மையான மல்லி சேர்ந்து விழுந்து கிடக்கிறாய் மண்ணில்

மண்ணில் மட்டும் இல்லை

எண்ணுள்ளும் தான்…

மழை

மாலை பொழுதிலே,
கொட்டும் மழையிலே,
துளி துளியாய் விழும் மழையில் தவழுது உன் முகம்
தாங்கி கொள்ளுது பூமி
தட்டி பறிக்க ஏங்குது என் மனம்…
மழை விட்டது,
மண்வாசனை தொட்டது
மண்ணை மட்டும் அல்ல எண்ணையும் அவள் கைப்பேசி வழியாக…
கொட்டுது மழை மறுபடியும்,

அவள் சொல் வழியே….

போராடு

கடை வரை போராடு
விடை அறிய போராடு
மானம் மறந்து
மனம் திறந்து
வலி மறந்து

வெற்றிக்கு வழி தேடி போராடு
விதி மாறும்
அது வரை மனம் தளராதே..
ஒரு நாள் வீறுநடை போடுவாய்…….

வள்ளி சொல்லி கள்ளி கொள்ளி

அடியே வள்ளி

தினமும் உங்க வீட்டுக்கு வர சொல்லி

ஏமாத்திட்டியே கள்ளி

தினமும் உன் பெயர சொல்லி

ஊத்திகிட்டேனே 200 மில்லி

விடிய காலையில பாக்கறான் வெள்ளி

உன்ன நெனச்சாதால பூக்குது சப்பாத்திகள்ளி

நீ மட்டும் வேணாம்னு சொன்ன

உனக்கு வைப்பேன் கொள்ளி…..

துக்கணா குருவி கூடு

ஆண் குருவியோ அழகான இடம் தேர்ந்து,
ஆபத்தில்ல உயரம் பார்த்து,
தன் அன்பான துனைவிக்கு
தன்னை செதுக்கி செதுக்கி கட்டுமாம் கூடு,
பின்னி, பின்னி நீர் துளைக்க முடியா கூடு அமைக்குமாம் குருவி,
கூட்டிலே இரு அறை அமைத்து
ஒரு அறையில் உறங்கவும்,
மறு அறையில் ஊஞ்சல் ஆடி விளையாடவும் கட்டுமாம் கூடு,
கூடு கூடும் வேளையில் கூட்டி வந்து காட்டுமாம் தன் இணைக்கு,
காதலின் கண் சுழித்தால்
கரம் ஏற்றுமாம் இன்னொரு கூடு கட்ட
அவளுக்கு பிடித்தார் போல..

இரவிலே அன்பு செலுத்தும் அவள் முகத்தை காண
மின்மினி பூச்சி எடுத்து வருமாம் கூட்டுக்கு,
தென்னகீற்றிலே தென்றல் பட்டு அடிக்க,
சந்திரன் மெல்லிய முகம் காட்ட,
குருவியோ
கீச் கீச் என்று சத்தமிட,
தென்றலோடு குருவி சேர்ந்து காற்றினில் தவழ,
இதை கண்டு நானோ உருக,
உருவாக்கியதே புது கவிதை….

இயற்கையோடு இணை

மேகத்தினுள் நின்ற மழையே
மண்ணுள் இறங்கி ஈரமாய் நின்றாய்
இந்த
மாலைப்பொழுதில்
தணிந்த சூரியன் தந்தான் வானவில்லை வளைவாக
இதை கண்டவாறு
ஈர தலையோடு ஒதுங்கிய நான் கையில் தேநீர் குவளையொடு
தென்றல் பட்டு தணிகிறது

தேநீரின் சுடு

மண்வாசனையோடு

தேநீரின் வாசமும் கலந்து மயக்குதே மனதை…..